நான்கு நாடுகளில் இந்தியத் தூதரகங்கள்மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:ஐஸ்லாந்து, குவாட்டமாலா, நைஜர், மாலி ஆகிய நாடுகளில் புதிதாக தூதரங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வெளிநாடுகளில் கூடுதலான தூதரகங்களையம், துணைத் தூதரகங்களையும் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்த நாடுகளில் உள்ள இந்தியர்களின், சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்களை மேம்படுத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக ஐஸ்லாந்து தலைநகர் ரெய்ஜாவிக், குவாட்டமாலா தலைநகர் குவாட்டமாலா சிட்டி, நைஜர் தலைநகர் நியாமே, மாலி தலைநகர் பமாகா ஆகிய நகரங்களில் தூதரகங்களை திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், சீனாவின் குவாங்ஸோ நகரில் புதிதாக ஒரு துணைத் தூதர் பதவி உருவாக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications