அமைச்சர் ராசாவுக்கு எதிராக பாமக போர்க்கொடி
ஜெயங்கொண்டம்:அரியலூருக்குள் திமுக மத்திய அமைச்சர் ராசாவை ஊருக்குள் விட மாட்டோம் என பாமக அறிவித்துள்ளது.
பாமகவின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடந்தது. இக் கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட செயலாளர் வைத்தி தலைமை வகித்தார்.இதில் பேசிய அவர்,
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருமானம் தரும் பகுதியாக அரியலூர் இருந்தது. ஆனால், அரியலூரை பெரம்பலூரில் இருந்து பிரித்துவிட்டார்கள்.
பெரம்பலூருக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தை கொண்டு வந்துள்ள மத்திய அமைச்சர் ராசா மேலும் பல வருமானம் வரும் திட்டங்களை பெரம்பலூர்க்கே கொண்டு செல்கிறார்.
மேலும் அரியலூர் மாவட்டத்தை இயங்க விடாமலும் அதிகாரிகளை நியமிக்காமலும் காலம் தாழ்த்தி துரோகம் செய்து வருகிறார்.
இந்த நிலை தொடர்ந்தால் அரியலூருக்குள் அமைச்சர் ராசாவை நுழைய விடமாட்டோம் என்றார்.
மேலும் இது தொடர்பாக கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் பாமக- திமுக இடையே நேரடி மோதல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications