டாடா திட்டத்தை எதிர்ப்பது தவறு: எக்ஸ் ராஜாராம்
சென்னை:டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு திட்டத்திற்கு எதிரான பிரசாரம் தேவையற்றது, தவறானது. இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் க.ராஜாராம் கூறியுள்ளார்.
மறைந்த எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சர், சபாநாயகர் என பல பொறுப்புகளை வகித்தவர் ராஜாராம். இவர் டைட்டானியம் டை ஆக்சைடு திட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 30 வருடங்களாக கனிம வளத்தை எடுத்து விற்கும் தொழில் நடந்து வருகிறது. 59க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்களால் அந்தப் பகுதி மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எந்த லாபமும் இல்லை. அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரவில்லை.
ஆனால் டாடா ஸ்டீல் நிறுவனம், ரூ. 2500 கோடி முதலீட்டிலான தனது திட்டத்தை இங்கு நிறைவேற்றினால், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அபரிமிதமாக கிடைக்கும். உள்ளூர் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடையும்.
டாடா நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்தால், அப்பகுதி பாலைவனமாகி விடும் என்று கூறுவது அபத்தமானது. அது தவறான பிரசாரம். இந்தத் திட்டத்தால் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம்தான் உயருமே தவிர வேறு தீங்கு எதுவும் நடந்து விடாது. எனவே இந்தத் திட்டத்தை யாரும் எதிர்க்கக் கூடாது என்று கூறியுள்ளார் அவர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications