வளர்ச்சிப் பாதையில் தமிழகம் - சோனியா பாராட்டு
மதுரைதமிழகம் அனைத்துத் துறைகளிலும் பெரும் வளர்ச்சியில் உள்ளது. முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழகம் மேலும் பல வளர்ச்சிகளை அடையும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
ராமேஸ்வரம் - மானாமதுரை இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை நேற்று சோனியா காந்தி, மதுரையில் நடந்த கோலாகல விழாவில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை பச்சைக் கொடி காட்டித் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ், ப.சிதம்பரம், ஆர்.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சோனியா காந்தி பேசுகையில், முதல்வர் கருணாநிதியின் சீரிய தலைமையின் கீழ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பீடு நடை போட்டு வருகிறது. மிகுந்த உறுதியோடும், சாதனைகளோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
முதல்வர் கருணாநிதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தூண். அவர் ஒரு மூத்த அரசியல் நிபுணர். அவரை சந்திப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.
முதல்வர் கருணாநிதியின் தலைமையில் தமிழகம் பெரும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தனக்கென தனித்துவம் கொண்டு உறுதியான மாநிலமாக உருவெடுத்துள்ளது. பிற மாநிலங்களுக்கு சிறந்த உதாரணமாக தமிழகம் விளங்குகிறது.
மக்களின் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை மேலும் பெறும் வகையில் இங்குள்ள அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
திமுக அரசுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், மத்திய அரசும் முழு ஆதரவுடன் உள்ளன. தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் உதவி வருகின்றன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்த பின்னர் மீட்டர் கேஜ் பாதைகளை அகலப் பாதைகளாக மாற்றும் பணிகள் வேகம் பிடித்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 25 புதிய பாதைகள் அமைக்கும் பணி, அகலப் பாதைப் பணிகள், மின் மயமாக்கல் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த விழா முதலில் ராமேஸ்வரத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் பக்தர்களுக்கு இடையூறு தரக் கூடாது என்பதற்காகவே மதுரையில் நடக்கிறது. மதுரை பாரம்பரியம் மிக்க நகரம். தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாக திகழும் உலகப் புகழ் பெற்றநகரம்.
தென்னாட்டு காசி எனப்படும் ராமேஸ்வரத்திற்கும், மானாமதுரைக்கும் இடையிலான அகல ரயில் பாதையினால் அந்தப் பகுதி மக்கள் மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான பயணிகள், பக்தர்கள் பயன் அடைவார்கள்.
கடந்த 3 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்த சேவைகள் மற்றும் பணிகளால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்காக ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத்துக்கும், ரயில்வே குடும்பப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் சோனியா காந்தி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications