ஜேத்மலானியின் வீட்டில் ரூ. 8 லட்சம் திருட்டு!
புனே:பிரபல கிரிமினல் வழக்கறிஞரான ராம் ஜேத்மலானி வீட்டில் ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய மந்திரியும், ஜெயலலிதா, மதுரை செரீனா இவர்களுக்கு வாதாடிய பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானியின் சொகுசு பங்களா புனேவை அடுத்து கராடி என்ற இடத்தில் உள்ளது.
இங்கு எப்போதாவது தான் வருவார் ஜேத்மலானி. கடந்த வாரம் ஓய்வெடுக்க இங்கு வந்துள்ளார்.
தனது அறையில் உள்ள லாக்கரில் பணம் வைத்துள்ளார். ஆனால், பின்னர் லாக்கரை திறந்து பார்த்தபோது ரூ.8 லட்சம் குறைந்துள்ளது.
இதையடுத்து எரவாடா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த திருட்டு குறித்து அவர் கூறுகையில்,
ரகசிய எண் உள்ள இந்த லாக்கரில் நான் பணத்தை வைத்திருந்தேன். அந்த ரகசிய எண் எனக்கு மட்டும் தான் தெரியும்.
இதற்கு முன் இங்கு வேலை பார்த்தவர்கள் தான் பணத்தை திருடியிருக்க வேண்டும். லாக்கரை திறக்க பலமுறை முயற்சி செய்திருக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications