ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.50 அபராதம்
சென்னை:சென்னையில் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் ரூ. 50 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷ்னர் நாஞ்சில் குமரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கட்டாய ஹெல்மட் அமலில் உள்ளது. முதலில் கெடுபிடி செய்த போலீசார் பின்னர், தமிழக அரசின் உத்தரவுப்படி ஹெல்மட் அணியாதவர்களை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ஹெல்மெட் அணிவதை பலரும் கைவிட்டுவிட்டனர்.
இந நிலையில் கட்டாய ஹெல்மட் சட்டத்தை தமிழக அரசு ஏன் தீவிரமாக அமலாக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதையடுத்து சென்னை நகரில் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு தலா ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 28,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து சென்னை மாநகர கமிஷ்னர் நாஞ்சில் குமரன் கூறியுள்ளதாவது,
ஹெல்மெட் அணியாதவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் உத்தரவில் எந்தவித மாற்றமும் இல்லை.
இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால் எந்த விதத்திலும் அவர்களை துன்புறுத்தக் கூடாது. அதற்கு மாறாக ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications