நாளை கோவையில் அதிமுக போராட்டம்
சென்னை:கோவை மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நாளை கோவையில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை மாவட்டம், தொண்டமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் நகராட்சியில் வாழும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக எனது ஆட்சி காலத்தில் ரூ. 30 கோடியே 38 லட்சம் மதிப்பில் கவுண்டம்பாளையம் வடவள்ளி கூட்டு குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டு அதற்காக கடந்த 22-02-2006 அன்று டெண்டர் விடப்பட்டது.
ஆனால் அடுத்து திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அந்த டெண்டரை ரத்து செய்து, புதிதாக மறு டெண்டர் கோரியது. ஆனால் அந்த கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை.
எனது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல பல திட்டங்களை என்னை பழிவாங்குவதற்காக தடுத்தி நிறுத்தி மக்களை கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்கிறது திமுக அரசு. இதனால் மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய குடிநீர் கூட இந்த ஆட்சியில் கிடைக்கவில்லை.
ஆகவே பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீரை கிடைக்க விடாமல் தடுத்த திமுக அரசை கண்டித்தும், பொதுமக்கள் நலன் கருதி எனது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திருப்பூர் சி.சிவசாமி முன்னிலையிலும், எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலும் கவுண்டம்பாளையத்தில் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பொதுமக்களின் குடிநீர் தேவையை வலியுறுத்தி நாளை நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொள்ளவேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications