டாக்டர் ஹனீப் விசா ரத்து செல்லாது:ஆஸி. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சிட்னி:இந்திய டாக்டர் முகம்மது ஹனீப்பின் விசாவை ரத்து செய்தது செல்லாது என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வந்த பெங்களூரைச் ேசர்ந்த டாக்டர் முகம்மது ஹனீப்பை ஆஸ்திரேலிய போலீஸார் கைது செய்தனர்.
ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிய வந்ததால் அவர் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கடைசி நிமிடத்தில், தீவிரவாதிகளுக்கு செல்போன் சிம் கார்டைக் கொடுத்தார் என்று குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது ஆஸ்திரேலிய போலீஸ்.
இந்த வழக்கில் ஹனீப்புக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் அவரை விடுவிக்க விரும்பாத ஆஸ்திரேலிய அரசு, ஹனீப்பின் விசாவை தடாலடியாக ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து குடியுரிமை முகாமில் அடைக்கப்பட்டார் ஹனீப்.
ஹனீப் விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசும், காவல்துறையும் நடந்து கொண்ட விதம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஹனீப் மீது பாரபட்சம் காட்டப்படுவதாக எதிர்ப்புகள் எழுந்ததால், ஹனீப்பை விடுவிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து ஹனீப் விடுவிக்கப்பட்டு பத்திரமாக இந்தியா வந்து சேர்ந்தார்.
இந்த நிலையில், ஹனீப்பின் விசா ரத்து செய்யப்பட்டது செல்லாது என்று பிரிஸ்பேன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக நீதிபதி ஜெப்ரி ஸ்பெண்டர் அளித்துள்ள தீர்ப்பில், டாக்டர் ஹனீப்பின் விசாவை தவறுதலாக ரத்து செய்துள்ளார் குடியுரிமை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ். இந்த நடவடிக்கை தவறானது. இது செல்லாது.
தவறான வகைப்பாட்டின் மூலம் அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் விசாவை ரத்து செய்துள்ளார். இதன் மூலம் அவர் தவறு செய்துள்ளார். எனவே இந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.
தீர்ப்புக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆண்ட்ரூஸ், அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்று கூறியிருந்தார். எனவே பிரிஸ்பேன் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆஸ்திரேலிய அரசு அப்பீல் செய்யும் என்று தெரிகிறது.
இருப்பினும் ஆஸ்திரேலிய கோர்ட்டின் தீர்ப்பால் ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியா செல்ல வழி பிறந்துள்ளது. அவரும், தான் ஏற்கனவே பணியாற்றி வந்த கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications