6 வயது சிறுமி கொடூர கொலை-வாலிபர் கைது
சென்னை:சென்னை, வில்லிவாக்கத்தில் 6 வயது சிறுமி மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த பாபு-சாந்தி தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் இருந்தனர்.
இவர்களில் லதா(12), சுரேஷ்(10) ஆகியோர் 6 மற்றும் 5வது வகுப்பில் படித்து வருகிறார்கள். கடைசி மகள் பிரியா 1ம் வகுப்பு படித்து வந்தாள்.
![]() |
கடந்த 16ம் தேதி இரவு விளையாடச் சென்ற பிரியா வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் பிரியா கிடைக்காததால் தந்தை பாபு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும் கடந்த 4 நாட்களாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் பாபுவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அய்யனார் என்பவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. ஆனால் அந்த வீட்டில் உள்ளவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை கோவிலுக்கு காதுகுத்து விழாவிற்கு சென்றுவிட்டனராம்.
இதனால் சந்தேகமடைந்த பாபு, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பூட்டியிருந்த வீட்டை உடைத்து பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
அய்யனாரின் வீட்டுக்குள் உடல் அழுகிய நிலையில் நிர்வாணமாக பிரியா கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிறுமியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியைக் கொன்ற வாலிபர்:
இந்தக் கொலை தொடர்பாக விஜய்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பாபு வசிக்கும் அதே காம்பவுண்டில் தான் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் ஒரே காம்பவுண்டில் குடியிருப்பதால் கழிப்பறை பொதுவாக உள்ளதாம். அதை பயன்படுத்தவதில் அடிக்கடி தகராறு வருமாம். இதற்கிடையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு நடந்த சண்டையில் விஜயகுமாரை, பாபு கத்தியால் குத்திவிட்டாராம்.
இந்த பிரச்சனை போலீஸ் வரை சென்று இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கப்பட்டதாம். இருப்பினும் தன்னை தாக்கிய பாபுவுக்கு பாடம் கற்பிக்க எண்ணி அவரது மகள் பிரியாவை கொடூரமாக கழுத்தை நெரித்தும், தலையை சுவற்றில் மோதச் செய்தும் கொன்றுள்ளார்.
கொன்ற பிணத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் ஆளில்லாத அதே காம்பவுண்டை சேர்ந்த அய்யனாரின் வீட்டுக்குள் போட்டுள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications