ஜெர்மனியில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல்
மியூஜெலின்:ஜெர்மனியில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை கிழக்கு ஜெர்மனியின் மயூஜெலின் நகரில் இச் சம்பவம் நடந்தது. இந்திய வாலிபர்கள் ஒன்று கூடி இந்திய விழாவை நடத்திக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் சுமார் 50 ஜெர்மனியர்கள் அங்கு வந்து வாக்குவாதத்தில் இறங்கினர்.
பின்னர் இந்தியர்களை கடுமையாகத் தாக்கினர். இதையடுத்து இந்தியர்கள் கலைந்து ஓட அவர்களை விரட்டி விரட்டி அந்தக் கும்பல் தாக்கியது. இதைத் தொடர்ந்து தங்களை காத்துக் கொள்ள அப் பகுதியில் உள்ள இந்தியருக்குச் சொந்தமான உணவு விடுதியில் இந்திய வாலிபர்கள் புகுந்தனர்.
![]() |
அவர்களை காப்பதற்காக விடுதியின் கதவைப் பூட்டினார் அதன் உரிமையாளர். ஆனாலும் கதவை உடைத்துக் கொண்டு உள்ள புக அந்தக் கும்பல் முயன்றது. அது முடியாமல் போகவே அந்த உணவு விடுதி உரிமையாளரின் காரை உடைத்து சேதப்படுத்தினர்.
இந் நிலையில் போலீசார் அங்கு வந்து கும்பலை விரட்டினர். அவர்களையும் கும்பல் தாக்கியதில் 2 போலீசார் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் மொத்தம் 8 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய அனைவரும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வலது சாரிகளான இவர்கள் வெளிநாட்டினர் குறிப்பாக வெள்ளைத் தோல் அல்லாதோர் ஜெர்மனியில் நுழைவதை எதிர்ப்பவர்கள்.
இச் சம்பவம் தொடர்பாக சில வாலிபர்களை கண்துடைப்புக்காக கைது செய்த ஜெர்மன் போலீசார் பின்னர் அவர்களை விடுவித்துவிட்டனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications