நெல்லை விட்டு விட்டு காய்கறிக்கு மாறவிவசாயிகளுக்கு அமைச்சர் யோசனை!
திருச்சி:காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள், நெல்லை மட்டுமே விதைப்பதை விட்டு விட்டு விவசாயிகள் காய்கறிகள் பயிரிடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் யோசனை தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே திருவளர்ச்சோலை என்ற இடத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில்தான் இந்த யோசனையை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விவசாயிகள் குறிப்பாக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் நெல் பயிரிடுவதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. அதை விட்டு விட்டு காய்கறிகள் பயிரிடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகளுக்கு குறைந்த அளவிலான தண்ணீரே தேவைப்படும்.
மேலும் விவசாய நடவடிக்கைகளுக்கு நவீன தொழில்நுட்பங்களையும் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய அரசு தயாராக உள்ளது.
வளர்ந்த நாடுகளில் உள்ளதை விட நமது நாட்டில் நீரும், நிலமும் திருப்திகரமான அளவில் உள்ளது.
உயிரி உரங்களை அதிக அளவில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். இதற்காக தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் உதவியை விவசாயிகள் நாடலாம் என்றார் அமைச்சர் ஆறுமுகம்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வாச்சானியும் பங்கேற்றார். பின்னர் சமீபத்திய மழையால் கிள்ளிக்கூடு, உத்தமர்சீலி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர் பார்வையிட்டார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications