தலையில்லா கோழிகள்: இந்திய தூதரின்பேச்சால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி
டெல்லி:இந்திய எதிர்க் கட்சிகள் தலையில்லா கோழிகள் மாதிரி நடந்து கொள்வதாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரொனென் சென் கருத்து தெரிவித்துள்ளதற்கு நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் எழுந்தது.
ரொனென் சென்னை தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தில் இன்று பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் போராட்டத்தில் குதித்தன. இதையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன.
![]() |
ஒரு இணைய தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு இந்திய எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏன் இந்தக் கட்சிகள் தலை அறுபட்ட கோழிகள் போல துடிக்கின்றன என்று கூறியுள்ளார்.
பிரதமருக்கு மிக நெருக்கமானவரான சென், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதில் மிக முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.
சென்னின் இந்தக் கருத்து பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சியினரையும் இடதுசாரிகளையும் எரிச்சலில் ஆழ்த்தியுள்ளது. சென்னுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று இக்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
ெசன்னை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் அரசை வற்புறுத்தினர். அப்போது பதிலளித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரொனென் சென் பேச்சு தவறாக புரிந்து ெகாள்ளப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இதுகுறித்து ெசன்னிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஒரு வேளை சென் பேசியது உண்மையாக இருந்தால் அது தேவையற்றதாகும். சென் பேச்சு எம்.பிக்களை காயப்படுத்தியிருப்பது குறித்து தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார் முகர்ஜி.
அத்வானி பேசுகையில், சென்னை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவரது பேச்சை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று ஆவேசமாக கூறினார்.
விவாதத்தின்போது குறுக்கிட்ட லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறுகையில், சென் பேசியது உண்மையாக இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் சென் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த பிரச்னையால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஏற்பட்ட அமளியால் 2 அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications