ஆசிரியர்களின் பாலியல் தொல்லை: தப்பி ஓடிதோட்டத்தில் பதுங்கிய பிளஸ்டூ மாணவி
ஈரோடு:ஈரோடு மாவட்டம் நடுப்பாளையம் என்ற ஊரில், ஆசிரியர்களின் பாலியல் தொல்லையிலிருந்து தப்பித்து தலைமறைவாகி மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில் 2 நாட்களாக பதுங்கியிருந்து உணவின்றி மயங்கிக் கிடந்த பிளஸ்டூ மாணவியை போலீஸார் மீட்டனர்.
நடுப்பாளையத்தில் சாமி மெட்ரிக் பள்ளிக் கூடம் உள்ளது. இங்கு பிளஸ்டூ படித்து வருபவர் ரேவதி. பள்ளி விடுதியில் தங்கி இவர் படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவர் காணாமல் போனார்.
இதையடுத்து போலீஸார் ரேவதியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், பள்ளிக்கூடத்திற்கு அருகே உள்ள ஒரு மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார் ரேவதி.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து ரேவதியை மீட்டனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார் ரேவதி.
ரேவதி படித்து வரும் பள்ளியைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் ரேவதியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளனர். பின்னால் தட்டுவது, கன்னத்தைக் கிள்ளுவது, கையைப் பிடிப்பது என சில்மிஷம் செய்து வந்துள்ளனர்.
விடுதியில் தங்கிப் படித்து வருவதால் தனது கற்புக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என பயந்துள்ளார் ரேவதி. இதனால் பள்ளியிலிருந்து வெளியேறி அருகே உள்ள மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில் போய் பதுங்கியுள்ளார்.
அங்கு சாப்பாடு கிடைக்காமல் மயங்கிய நிலையில் கிடந்தபோதுதான் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் தொடர்ந்து மாணவியிடம் விசாரித்து வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications