சபரிமலையில் பெண்களுக்கு தனி சீசன்: கேரளா திட்டம்
நாகர்கோவில்:சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்காக தனி சீசனை உருவாக்கலாம் என்று கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நகைத் தொழிலாளர் பாதுகாப்பு பேரவையின் மாநாடு நடைபெற்றது.
இதில் கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன் கலந்து கொண்டு பேசியதாவது:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க அரசு தயாராக உள்ளது. அவர்களுக்கென்று தனி சீசனுக்குரிய காலத்தை தேர்வு செய்து அவர்களை சபரிமலை சன்னிதானத்திற்கு அனுப்பவும் தயார். அந்தக் காலத்தில் பூசாரி மற்றும் காவலாளிகளைத் தவிர மற்ற அனைவருமே பெண்களாக இருப்பார்கள்.
ஆனால் இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. கேரள அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் நிலை.
அதேசமயம், உச்சநீதிமன்றம் உத்தரவிடாவிட்டால் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பம்பையுடன் தடுத்து நிறுத்தப்படுவர்.
கடந்த ஆண்டில் மட்டும் 4.5 கோடி பேர் சபரிமலை வந்து சென்றனர். அதன் மூலம் ரூ.101 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications