தமிழகத்தில் 20,000 பேர் எய்ட்ல் நோயால் பாதிப்பு
மதுரை:தமிழகத்தில 20,000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக எய்ட்ஸ் நோய் நல சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட எய்ட்ஸ் உள்ளோர் நல சங்கம் சார்பில் ஆரோக்கிய வாழ்வு மையம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் கருணாநிதி துவக்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் மொத்தம் 20,000 பேர் எய்ட்ஸ் எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 1800 பெரியவர்கள், 1500 சிறியவர்கள் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தொழில் செய்ய வங்கி கடன் வழங்க வேண்டும். இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். அரசு ஆஸ்பத்தியில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். சிறியவர்களுக்கு துவக்க கல்வி முதல் உயர் கல்வி வரை அரசு உதவ வேண்டும் என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications