மீண்டும் விண்ணை தொடும் விமானக் கட்டணங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:ஜெட் மற்றும் சஹாரா, கிங்ஃபிஷர் மற்றும் ஏர் டெக்கான் விமான நிறுவனங்கள் அமைத்துள்ள புதிய கூட்டணியால் விமான பயணம் மீண்டும் மிகுந்த செலவுவுடையதாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஏர் டெக்கான் நிறுவனம் பெங்களூர்- ஹூப்ளி இடையே நடத்தி வரும் குறைந்த கட்டண விமான சேவையை விரைவில் நிறுத்தவுள்ளது. காரணம், ஏர் டெக்கான் நிறுவனத்தின் பங்கை கிங்ஃபிஷர் நிறுவனம் வாங்கியதுதான்.

Jet Air

தற்போது இந்தப் பிரிவில் விமான சேவை மிகுந்த நஷ்டமுடையதாக இருப்பதால் இந்த சேவையை நிறுத்த கிங்ஃபிஷர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஜெட் மற்றும் சஹாரா, கிங்ஃபிஷர், ஏர் டெக்கான் நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள புதிய பங்கு விற்பனை மற்றும் ஒப்பந்தங்களின் விளைவாக பல குறைந்த கட்டண விமான சேவைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

லாபத்துடன் கூடிய விமான சேவையை மட்டும் தொடர்ந்து நடத்த இந்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. நஷ்டத்தில் இயங்கும் சேவைகளை நிறுத்த இவை திட்டமிட்டுள்ளன.

Air Deccan

இதுகுறித்து ஏர் டெக்கான் நிறுவன செயல் தலைவர் ஜி.ஆர்.கோபிநாத் கூறுகையில்,

ஏர் டெக்கான் மற்றும் கிஙஃபிஷர் நிறுவனங்களின் கூட்டுக் குழு விரைவில் விமான சேவைகளை லாபத்துடன் நடத்துவது எப்படி என்பது குறித்து விவாதிக்கவுள்ளன. அதன் பின்னர் விமான சேவைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஜெட்லைட் (முன்னாள் சஹாரா) நிறுவனத்தின் தற்காலிக தலைமை செயல் அதிகாரி கேரி கிங்ஷாட் கூறுகையில்,

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய விமான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் இடையில் போட்டி ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளப்படும். செப்டம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது என்றார்.

இந்த நான்கு முக்கிய விமான நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த வர்த்தக் கூட்டணியால் குறைந்த கட்ட விமான சேவைகளுக்குத்தான் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

லாபத்தை மட்டுமே அவர்கள் முக்கியமாக கருதுவதால் குறைந்த கட்டண விமான சேவைகளை படிப்படியாக அடியோடு நிறுத்தும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+