புதுக்கோட்டை தொகுதிக்காக ராஜினாமா செய்யவும் தயார்-ரகுபதி
புதுக்கோட்டை:புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை மீட்க எம்பி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக மத்திய உள்துறை இணையைமச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
புதுக்கோட்டை எம்.பி. தொகுதி ரத்து செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அந்த தொகுதியை மீண்டும் மீட்பதற்காக எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவும் கூட தயாராக இருக்கிறேன்.
தேர்தல் கமிஷன் என்பது ஒரு சுதந்திரமான, தனி அமைப்பு. எனவே இந்தப் பிரச்சனையை அரசியலாக்க விரும்பவில்லை. தொகுதியை மீட்டு தருமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா மற்றும் தேர்தல் கமிஷனர் சந்திரசேகரன் ஆகியோர் நேரில் சந்தித்து வற்புறுத்தி உள்ளேன்.
அதுபோல தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் கோரிக்கை வைத்துள்ளேன். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடவும் தயாராக இருக்கிறேன் என்றார்.
இந்தத் தொகுதியை மீட்க ரகுபதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications