வைகுண்டராஜன், தம்பிகளுக்கு முன் ஜாமீன்!!
மதுரை:ஜெயா டிவியின் பங்குதாரர் வைகுண்டராஜன் உள்ளிட்ட 3 பேர் மீது அணு சக்தி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
![]() |
தூத்துக்குடி மாவட்டம், கீரைக்காரன்தட்டையைச் சேர்ந்த வி.வி.மினரல்ஸின் உரிமையாளர் வைகுண்டராஜன். இவர் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரையில் அனுமதியில்லாமல் மணலை அள்ளி அதிலிருந்து அணு சக்திக்கான தாதுவைப் பிரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார்.
இதில் அரசிடம் கணக்கில் காட்டாமல் முறைகேடாக அள்ளிய மணலும் அடக்கம். கடந்த அதிமுக ஆட்சியில் செல்வாக்கோடு இந்த தொழிலை செய்து வந்த வைகுண்டராஜனுக்கு, திமுக ஆட்சி வந்தவுடன் கடும் சோதனை ஏற்பட்டது.
இவர் மீது, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரையில் அரசின் அனுமதியில்லாமல் தாது மணலை எடுத்து பிரித்து விற்றதாக மாநில கனிம வளத்துறை துணை இயக்குநர் குமரி மாவட்ட மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அணு சக்தி சட்டத்தின் கீழ் வைகுண்டராஜன், அவரது சகோதரர்கள் ஜெகதீசன் மற்றும் சந்திரேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவரது நிறுவனங்களில் சோதனை நடத்தியதுடன், அவரை பிடித்து விசாரிக்கவும் முடிவு செய்தது.
இதையடுத்து தனது 2 தம்பிகளுடன் தலைமறைவானார் வைகுண்டம்.
முன் ஜாமீன் கோரி இவர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி ராஜசூர்யா, 3 பேருக்கும் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
மேலும் தன் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வைகுண்டராஜன் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவையும் விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, அதை நான்கு வாரங்களுக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications