சென்னை தியேட்டர்களில் மெட்டல் டிடெக்டர்கள்!
சென்னை:சென்னை நகரில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் இன்று முதல் மெட்டர் டிடெக்டர் கருவிகள் கொண்டு ரசிகர்களை சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது. சோதனைக்குப் பின்னரே ரசிகர்கள் தியேட்டர்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஹைதராபாத்தில் உள்ள லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் ஆகிய இரு இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளே இதற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிரது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வர்த்தக மையங்கள், தியேட்டர்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரக் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை நகரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக சென்னை நகரில் உள்ள தியேட்டர்களில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவியான மெட்டர் டிடெக்டர்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை நகர தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், தியேட்டர்களில் அதிக அளவிலான கண்காணிப்பை மேற்கொள்ளும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ரசிகர்கள் மீது தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் போலீஸார் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஷோ முடிந்த பின்னரும் தியேட்டர் முழுவதும் தீவிர சோதனை நடத்த வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் அவர்களை உடனே வெளியே அனுப்ப வேண்டும் அல்லது காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தியேட்டர் வளாகத்தில் கேட்பாரின்றி நீண்ட நேரம் நிற்கும் வாகனங்கள் குறித்து காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
தியேட்டர்களின் அனைத்து வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவியைப் பொருத்த வேண்டும். தியேட்டர்களுக்குள் பைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அப்படியே கொண்டு போக விரும்பினால் அவற்றைத் திறந்து காட்டி ஆட்சேபனை இல்லை என்றால்தான் உள்ளே கொண்டு போக அனுமதிக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் இன்று முதல் சென்னை நகரில் அமலுக்கு வருகிறது என்றார் ராமநாதன்.
மெட்டல் டிடெக்டர் கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கை படிப்படியாக வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படக் கூடும் என்று தெரிகிறது.
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications