சென்னையில் தீவிரவாதிகள் ஊடுறுவல்!br/நகரை தகர்க்க சதி- உளவு பிரிவு எச்சரிக்கை!
சென்னை: சென்னை நகரில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், வழிபாட்டுத் தலங்களில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தி பெரும் நாசத்தை ஏற்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சென்னை நகரில் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு தமிழக காவல்துறையை எச்சரித்துள்ளது.
ஹைதராபாத் இரட்டை வெடிகுண்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தீவிர கண்காணிப்பும் மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை நகரில் பெரும் குண்டுவெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தி பெரும் நாசத்தை ஏற்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னை நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழலாம் என்றும், இதற்காக 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாகவும், தங்களது தலைமையின் உத்தரவுக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளின் தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்டபோது இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதையடுத்து தமிழக டிஜிபிக்கு மத்திய உளவுப் பிரிவு இவற்றைத் தெரிவித்து பாதுகாப்பை பலப்படுத்தமாறும், தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறும் எச்சரித்துள்ளது.
இதேபோலத்தான் ஹைதராபாத்திலும் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்திருந்தது. தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஹைதராபாத் போலீஸார் ஈடுபட்டிருந்த நிலையில்தான் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னைக்கு அச்சுறுத்தல் இல்லை-நாஞ்சில் குமரன்
இந் நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
சென்னை நகருக்கு என்று தனியாக அச்சுறுத்தல் ஏதும் வரவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தீவிரவாதிகள் அபாயம் இருப்பதாக மத்திய உளவுப் பிரிவு உஷார்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தான் சென்னை நகரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 4 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளனவே என்று கேட்டதற்கு, நீங்கள் சொல்வது போல எந்த ஒரு தகவலும் இல்லை. உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அதிகாரிகள் சென்னை வந்து என்னுடன் ஆலோசனை எதுவும் நடத்தவில்லை.
கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் வருவதால் சென்னையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications