இந்திய-யுஎஸ் கடற்படை கூட்டு பயிற்சி துவக்கம்br/34 கப்பல்கள்; கண்காணிப்பில் 160 விமானங்கள்!
சென்னை:
இந்திய, அமெரிக்கா உள்பட 5 நாடுகள் பங்கேற்கும் மாபெரும் கூட்டு கடற்படை போர் பயிற்சி நேற்று தொடங்கியது. இந்தப் பயிற்சி 6 நாட்கள் நடைபெறும்.

வங்கக் கடலில் விசாகபட்டிணம் தொடங்கி அந்தமான் தீவுகளின் கடற்பகுதி வரை இந்த பயிற்சி நடக்கிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா,
ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 27 போர்க்
கப்பல்கள், நீர் மூழ்கிகள் பங்கேற்றுள்ளன.
இதில் அணு சக்தியால் இயங்கும் அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல்களாக யுஎஸ்எஸ் நிமிட்ஸ், யுஎஸ்எஸ் கிட்டி ஹாக், அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கியான யுஎஸ்எஸ் சிகாகோ ஆகியவையும் அடங்கும்.
இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட் உள்ளிட்ட 7 போர்க் கப்பல்களும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
சென்னையிலிருந்து இடதுசாரிகள் பேரணி:
அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுடனான இந்தக் கூட்டு பயிற்சிக்கு
இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் முடிவைக் கண்டித்து நேற்று நாடு முழுவதும் இடதுசாரிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த நிலையில் இன்று காலை சென்னை மற்றும் கொல்கத்தாவிலிருந்து இரண்டு பிரமாண்ட பேரணி இயக்கம் தொடங்கியது.
சென்னை துறைமுக வாசலில் தொடங்கிய பிரமாண்ட பேரணியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தொடங்கி வைத்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழக செயலாளர் தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரகாஷ் காரத் பேசுகையில், மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை இந்தியாவுக்குள் அனுமதிக்க துடிக்கின்றனர். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் குரல் கொடுத்து கப்பல் விட்ட வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளான இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்த பிரசார இயக்கம் நடைபெறுகிறது என்றார்.
பிரசார இயக்கப் பேரணி விசாகப்பட்டனத்தில் முடிவடைகிறது. அதேபோல கொல்கத்தாவிலும் ஒரு பிரசார இயக்கப் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக துறைமுக நுழைவாயிலில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு பிரகாஷ் காரத், டி.ராஜா ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications