வெளிநாட்டு மாணவர்களைக் குறி வைக்கும்br/டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
டெல்லி:
புகழ் பெற்ற டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ) வெளிநாடுகளில் அதிக அளவில் தேர்வு மையங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களை மட்டுமல்லாது, வெளிநாட்டு மாணவர்களையும் கவரும் நோக்கில் இந்த முடிவு ஜே.என்.யூ எடுத்துள்ளது.
ஒரு காலத்தில் மேல் படிப்பு படிக்க வெளிநாடு போவது ஃபேஷனாக இருந்து வந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் பலர் இந்தியாவைத் தேடி ஓடி வரும் நிலை உருவாகியுள்ளது. கல்வித் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் இந்தியக் கல்வி நிறுவனங்கள் சர்வதேச தரத்திற்கு மாறியுள்ளதே இதற்குக் காரணம்.
இந் நிலையில் மாறியுள்ள இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு அதிக அளவிலான வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளில் அதிக அளவிலான தேர்வு மையங்களை திறக்க ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
உலகின் 200 புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களின் வரிசையில் ஜே.என்.யூவும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் குறிப்பாக சார்க் நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் அதிக அளவிலான தேர்வு மையங்களை ஜே.என்.யூ திறக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஜே.என்.யூ தலைமை புராக்டர் பஹீதர் கூறுகையில், வளைகுடாவில் இதுவரை எங்களது பல்கலைக்கழகத்திற்கு மையம் எதுவும் இல்ைல.
பஹ்ரைனில் தற்போது மையத்ைதத் திறந்துள்ளோம். எங்களது பல்கலைக்கழகம் மூலம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
டெல்லியில் உள்ள பல்கலைக்கழகங்களில் தற்ேபாது 1500 வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் ஜே.என்.யூவில் மட்டும் 250 பேர் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இடங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய, பாகிஸ்தான் உறவில் தற்ேபாது நல்ல முன்னேற்றம் காணப்படுவதால், பாகிஸ்தானிலும் ஒரு தேர்வு மையத்தைத் தொடங்க ஜே.என்.யூ திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த மையத்தில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வாகும் மாணவர்கள் டெல்லி வந்து படிப்பார்கள் என்றார் பஹீதர்.
பஹீதர் தொடர்ந்து கூறுகையில், தற்போது இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் எங்களுக்கு மையங்கள் உள்ளன. இங்கிருந்து கணிசமான அளவுக்கு மாணவர்கள் படிக்க வருகிறார்கள். விரைவில் அனைத்து சார்க் நாடுகளிலும் எங்களது மையங்கள் திறக்கப்படும் என்றார்.
இதேபோல நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளையும், தகவல் தொடர்பியல் ெதாடர்பான புதிய படிப்புகளையும் அறிமுகப்படுத்த ஜே.என்.யூ. திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த திட்டம், திட்டக் கமிஷன் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் இவை தொடங்கப்படும்.
1969ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 5500 மாணவர்கள் பயிந்று வருகின்றனர்.
உலகின் பிரபலமான யேல் பல்கலைக்கழகம், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம், வடக்கு கரோலினா பல்கலைக்கழகம், லான்காஸ்டர் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம், அங்காரா பல்கலைக்கழகம், மாஸ்கோ மாநில பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் பிரபலமான 71 பல்கலைக்கழகங்ளுடன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் புரிந்துணர்வு
ஒப்பந்தம் செய்து கொண்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கெளரவப் பேராசிரியர்களாகப் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications