கட்டாய கிராம சேவை: மருத்துவ மாணவர்கள்br/வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்
சென்னை:
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸின் கட்டாய கிராம சேவை உத்தரவை கண்டித்து தமிழகத்தில் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவப் படிப்பை முடிப்பவர்கள் கட்டாயம் ஒரு ஆண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இதற்கு மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமைச்சர் அன்புமணியின் உத்தரவைக் கண்டித்து போராட்டத்தில் அவர்கள் குதித்துள்ளனர். முதலில் அரசு மருத்துவமனைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமப்புறங்களில் போய் சேவை செய்யத் தயார். ஆனால் எங்களை கூலித் தொழிலாளர்கள் போல பாவிக்காமல், நிரந்தரப் பணி வழங்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதுவரை கட்டாய கிராம சேவை என்ற திட்டத்தை ஏற்க மாட்டோம், தொடர்ந்து போராடுவோம் என மாணவர்கள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications