'என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்டுகளுக்கு'br/பதவி உயர்வு கிடையாது - தமிழக அரசு
சென்னை:
என்கெளண்டர் செய்யும் காவல்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழத்தில் சமீப காலமாக போலீஸ் என்கெளண்டர்கள் அதிகரித்து விட்டன. நீண்ட காலமாக டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கும் பல ரவுடிகளை போலீஸார் என்கெளண்டர்கள் மூலம் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் என்கெளண்டர் தொல்லை மட்டும் தெடார்ந்து கொண்டிருப்பதால் ரவுடிகளிடையே பெரும் பீதி நிலவுகிறது.
அதேசமயம், என்கெளண்டர்கள் தொடர்பாக மனித உரிமை ஆணையத்திலும் புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. போலீஸார் வேண்டும் என்றே சுட்டுக் கொன்று விடுவதாக புகார்கள் அதிக அளவில் வருகின்றன.
சமீபத்தில் கூட போலீஸாரால் சுட்டுக் ெகால்லப்பட்ட ரவுடி வெள்ளை ரவியின் மனைவி விமலா செய்தியாளர்களை அழைத்து வழங்கிய பேட்டியில், எனது கணவரை ஏமாற்றி கூட்டிச் சென்று கொன்று விட்டதாக போலீஸ் மீது புகார் கூறினார்.
இந்த நிலையில், காவல்துறையினர் என்கவுண்டரில் ஈடுபடும்போது சில விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தமிழக அரசு இந்த பரிந்துரைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தலைமை செயலாளர் திரிபாதி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், என்கெளண்டர் நடந்தால் அதனை ஒரு குற்றமாக கருதி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் முறைப்படி வழக்குப் பதிவு செய்யவேண்டும். அந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
விசாரணை முடியும் வரை என்கவுண்டரில் ஈடுபட்ட போலீசாருக்கு பரிசுகளோ அல்லது பதவி உயர்வோ வழங்கக் கூடாது.
ஆர்டிஓ விசாரணைக்கு பதில், என்கெளண்டர் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என்கெளண்டர் குறித்த அறிக்கையை 6 மாதத்திற்கு ஒருமுறை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஜூன் 30ம் தேதி வரையிலான அறிக்கையை உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும். காவல்துறை அதிகாரிகள் இந்த உத்தரவுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications