நன்னடத்தை ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க முடிவு?
நெல்லை:
தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளில் நன்னடத்தை சான்றிதழ்களுடன் உள்ள கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, வேலூர், கோவை உள்பட தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளிலும் மொத்தம் 3,500 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர்.
இவர்களில் நன்னடத்தை அடிப்படையில் ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாளன்று கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இது அமல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் நன்னடத்தையுடன் கூடிய கைதிகளை விடுதலை செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைகளுக்கும் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு ஒரு உத்தரவை அனுப்பியுள்ளது.
அதில் வரும் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டுகள் பூர்த்தி செய்த நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு கூறியது.
இதன் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டுகள் பூர்த்தி செய்த நன்னடத்தை கைதிகள் 52 பேரின் பெயர் மற்றும் அவர்களின் விவரங்கள் சென்னை சிறைத்துறை கூடுதல் டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவால் நன்னடத்தை கைதிகள் 375 பேர் விடுதலையாகக் கூடும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications