தமிழர்களுக்கு தமிழக தலைவர்கள் அறிவுரைbr/கூற ராஜபக்சே கோரிக்கை
கொழும்பு:
விடுதலைப்புலிகளால் தவறான வழியில் செல்லும் தமிழர்களுக்கு தமிழக தலைவர்கள் அறிவுரை சொல்ல வேண்டும், விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கடத்துவதை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜபக்சே ஒரு அறிக்கையை விடுத்துள்ளார். அதில், விடுதலைப்புலிகளால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சமாளிக்க எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது சர்வேதச அளவில் எங்கள் நாட்டிற்கு உதவி கிடைத்து வருகிறது. ஆனால் எங்கள் நாடு இந்தியாவுடன் தான் விசேஷ உறவு வைத்துள்ளது.
எங்கள் நாட்டை சேர்ந்த எந்தவொரு அரசியல்வாதியையும் விட இந்தியாவை நான் நன்கு புரிந்துவைத்துள்ளேன். இந்தியா-இலங்கை இடையே உள்ள நிலைத்தன்மை மற்றும் செல்வ செழிப்பை யாராலும் பிரித்து விட முடியாது.
இலங்கை பிரச்சனையில் இந்தியா தலையிடவேண்டும் என்று நான் மட்டும் எதிர்பார்க்கவில்லை. உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எங்கள் நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையிலிருந்து இந்தியா தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருந்து கடல்ள் வழியாக விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கடத்தி வருகிறார்கள். இதை தடுப்பதற்கு எங்களுக்கு இந்தியாவின் உதவி தேவை.
இலங்கையில் அமைதி சூழ்நிலை மற்றும் தீர்வு ஏற்பட இங்குள்ள தமிழ் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆனால் அவர்கள் தவறான முறையில் வழி நடத்தப்படுகின்றனர். தவறான வழியில் செல்லும் தமிழ் மக்களுக்கு, தமிழக தலைவர்கள் அறிவுரை கூற வேண்டும்.
இந்தியா பலவகையிலும் எங்களுக்கு உதவி செய்து வருகிறது. எங்களது ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இந்தியா அணு ஆயுதம் கொண்ட நாடு என்று 1999ல் அமெரிக்கா அங்கீகாரம் அளித்தது.
ஆனால் அதற்கு முன்பே இந்தியாவின் பெருமையை நான் சுட்டிக்காட்டி இருந்தேன். இதற்காக அப்போது இலங்கை மீடியாக்கள் எனக்கு கடுமையாக கண்டித்தன. ஆனால் நான் அன்றே விஷயத்தை கணித்து கூறியதாக இப்போது பாராட்டு தெரிவிக்கின்றனர் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications