லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை!
திருநெல்வேலி:
லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சகுர்பர்த்தின். இவர் மாவட்ட பத்திர பதிவாளர் அலுவலகத்தில் இணை சார்பதிவாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 1999ம் ஆண்டு மேலப்பாளையத்தை சேர்ந்த ஜோசப்ராஜன், தான் வாங்கிய நிலத்தை பத்திரம் பதிவு செய்வதற்காக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடைய நிலத்தை பதிவு செய்து கொடுப்பதற்கு ரூ.650 லஞ்சமாக சகுர்பத்தின் கேட்டார்.
இதுகுறித்து ஜோசப்ராஜன் அப்போதைய நெல்லை மாவட்ட லஞ்ச ஓழிப்பு டி.எஸ்.பி பெருமாள்சாமியிடம் புகார் செய்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்பாட்டின்படி ரசாயன பவுடர் பூசப்பட்ட பணத்தை லஞ்சமாக சகுர்பத்திடம் ஜோசப்ராஜன் கொடுத்தார்.
அப்போது மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மறைந்திருந்த டி.எஸ்.பி பெருமாள்சாமி தலைமையிலான போலீசார் சகுர்பத்தினை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கை அப்போதைய நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி மலுக்குமுதலி விசாரித்து வந்தார்.
இவ்வழக்கின் இறுதி விசாரணை நெல்லை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று (04-09-2007) நடந்தது. வழக்கை விசாரித்த நெல்லை தலைமை குற்றவியல் நீதிபதி மாயாண்டி சகுர்பத்தினுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டணையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications