மாணவிகளிடம் சில்மிஷம்: தலைமை ஆசிரியரைbr/மாற்றக் கோரி பெற்றோர்கள் போர்க்கொடி!
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபடும் தலைமை ஆசிரியரை உடனடியாக மாற்றக் கோரி மாணவ, மாணவியர், பெற்றோர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மோகனூர் யூனியனுக்குட்பட் ஒலப்பாளையத்தில் ஊராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இதில் 69 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு சதாசிவம் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.
இவர் பள்ளிக்கு சரியாக வருவதில்லை. வந்தாலும் குடித்து விட்டு தள்ளாடியபடிதான் வருவாராம். மேலும் குடிபோதையில் மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷத்திலும் ஈடுபடுவாராம்.
நேற்றும் குடித்து விட்டு பள்ளிக்கு வந்ததோடு, மாணவி ஒருவரிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்துத் தெரிவித்தார். கொதிப்படைந்த அந்த மாணவியின் பெற்றோரும், பிற மாணவிகளின் பெற்றோர்களும் திரண்டு ஆட்சித் தலைவரிடம் புகார் மனு கொடுத்தனர். மேலும் தலைமை ஆசிரியரை உடனடியாக மாற்றக் கோரி பள்ளிக்கு பூட்டுப் போடும் போராட்டத்தையும் நடத்த அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications