மதுரையில் மருதுபாண்டியர் சிலைbr/கருணாநிதி திறந்து வைக்கிறார்
மதுரை:
மதுரையில் நிறுவப்பட்டுள்ள மருது சகோதரர்களின் சிலை அடுத்த மாதம் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்படவுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன்முதலில் போர் துவங்கியது மருது சகோதரர்கள்தான்.
இதற்காக அவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.
இதன் நினைவாக மருது பாண்டியர்களுக்கு மதுரையில் சிலை நிறுவப்படுகிறது. குதிரையில் வாள் ஏந்தி போருக்கு செல்லும் தோற்றத்துடன் 10 அடி உயரத்தில் வெண்கல சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன் என்ற ஸ்தபதி இதனை உருவாக்கியுள்ளார். மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் 10 அடி உயர பீடத்தில் சிலை அமைக்கப்படுகிறது. ரூ. 25 லட்சம் செலவில் சிலை வடிக்கப்பட்டுள்ளது.
மருதுபாண்டியர்கள் நினைவு தினமான அக்டோபர் 27ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார். திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவு பூங்கா அமைக்கவும் தீர்மானித்துள்ளோம்.
மருது பாண்டியர் குறித்த ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் அவர்களது பெயரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை தொடங்கி ரூ.20 லட்சம் டெபாசிட் செய்யப்படும்.
மருதுபாண்டியர்களுடன் போரில் ஈடுபட்ட 72 தளபதிகள் பினாங்கு தீவுக்கு கடத்தப்பட்டனர். அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த அவர்களின் வாரிசுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களுக்கு அரசு உதவ வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றார் பொன். முத்துராமலிங்கம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications