நெஞ்சு வலியுடன் பஸ்சை ஓட்டிbr/60 பயணிகளைக் காத்த டிரைவர்!
புதுச்சேரி:
ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், அதைப் பொறுத்துக் கொண்டு பேருந்தில் இருந்த 60 பயணிகளின் நலனை மனதில் கொண்டு பத்திரமாக பேருந்தை ஓட்டி வந்து பேருந்து நிலையத்தில் நிறுத்தினார் அரசுப் பேருந்து ஓட்டுநர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுச்சேரி கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் பத்மநாபன். 45 வயதாகும் இவர் திருச்சிற்றம்பலத்தில் வசித்து வருகிறார்.
நேற்று இவர் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பேருந்தை ஓட்டிச் சென்றார். பேருந்தில் 60 பேர் இருந்தனர். புதுச்சேரி பேருந்து நிலையத்தை நெருங்கிய நிலையில் திடீரென பத்மநாபனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் துடித்தார்.
இருந்தாலும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வலியைப் பொறுத்தபடி, மிகவும் மெதுவாக பேருந்தை ஓட்டியபடி பேருந்து நிலையத்திற்குள் கொண்டு வந்து பேருந்தை நிறுத்தினார். பின்னர் மயங்கி ஸ்டியரிங்கில் சரிந்தார்.
பதறிப் போன பயணிகள் ஓட்டுநரை மெதுவாகத் தூக்கி இருக்கையில் கிடத்தினர். பின்னர் பாண்டுரங்கன் என்ற ஓட்டுநர் விரைந்து வந்து பேருந்தை அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications