வேலை கிடைக்காத விரக்தியில்br/சாந்தி தற்கொலைக்கு முயற்சி!
புதுக்கோட்டை:
வேலை கிடைக்காத விரக்தியிலும், தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்ததாலும் மனம் உடைந்தே தடகள வீராங்கனை சாந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றவர் சாந்தி. புதுக்கோட்டை மாவட்டம் தட்டக்குறிச்சி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி.
பெரும் வறுமையில் உழன்று வரும் குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி, அந்த சிரமத்திற்கு இடையிலும், தன்னால் முடிந்த அளவுக்கு பயிற்சி எடுத்து தோகா போட்டியில் கலந்து கொண்டு ஓடி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்தார்.
அந்த சாதனையை அங்கீகரித்த தமிழக முதல்வர் கருணாநிதி ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சாந்தி வீட்டினருக்காக ரூ. 1 லட்சம் மதிப்புள்ள எல்.சி.டி. டிவி ஆகியவற்றைப் பரிசாக அளித்தார்.
சாந்தி பாலின சர்ச்சையில் சிக்கியபோதிலும் கூட, அவரது திறமையை அங்கீகரித்து தமிழக அரசு இந்தப் பரிசினை வழங்கியது.
அதன் பின்னர் சாந்தி குறித்த எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் அவர் தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு என்ன காரணம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. பாலினச் சர்ச்சையில் சிக்கிய பிறகு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாந்தியை புறக்கணித்து வந்ததாம். அவரை எந்த நிகழ்ச்சிக்கும் கூப்பிடுவதில்லையாம். இது சாந்திக்கு பெரும் மன உளைச்சலைக் கொடுத்துள்ளது.
மேலும் புதுக்கோட்டை ஸ்டேடியத்தில் தடகளப் பயிற்சியாளர் பணியை வாங்க சாந்தி கடுமையாக முயன்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு அது கிடைக்கவில்லை. தடகளத் துறையைச் சேர்ந்தவர்களும் கூட சாந்திக்கு இந்த விஷயத்தில் உதவ முன்வரவில்லையாம்.
இப்படி அடுத்தடுத்து மன உளைச்சல் ஏற்பட்டதாலும், வேலையும் கிடைக்கவில்லை, மற்றவர்களும் புறக்கணிக்கிறார்கள் என்ற வருத்தத்திலும்தான் சாந்தி தற்கொலை முடிவுக்கு வந்தார் என்று கூறப்படுகிறது.
சாந்திக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்க முன்வர வேண்டும். இதன் மூலம் அவரது மனதில் ஏற்பட்டுள்ள விரக்தியை விரட்டியடித்து, அவரும் புத்துணர்ச்சியுடன் தனது வாழ்க்கையைத் தொடர முடியும் என்று சாந்தியின் உறவினர்களும், அவரது கிராமத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications