அந்நியச் செலாவணி வழக்கைbr/ரத்து செய்ய சசிகலா கோரிக்கை
சென்னை:
மத்திய அமலாக்கப் பிரிவு பத்து ஆண்டுகளுக்கு முன்பு போட்ட அந்நியச் செலாவணி வழக்கை தற்போது விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், இந்த வழக்கை காலாவதி ஆனதாக அறிவிக்கக் கோரியும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்னை உயர்நீதிமன்
றத்தில் மனு செய்துள்ளார்.
கடந்த 1997ம் ஆண்டு சசிகலா மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை மத்திய அமலாக்கப் பிரிவு தொடர்ந்தது. இத்தனை காலமாக நடக்காமல் இருந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது தொடங்கியுள்ளது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் மன தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று நீதிபதி தனபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சசிகலா சார்பில் வழக்கறிஞரும், அதிமுக எம்.பியுமான ஜோதி ஆஜரானார்.
அவர் வாதிடுகையில், இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்டது. இத்தனை காலமாக விசாரணை நடைபெறாமல் இருந்தது. ஒரு கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு 10 ஆண்டுகளாக எந்த விசாரணையும் நடைபெறாமல் இருந்தால் அது தானாகவே காலாவதியாகி விடும் என உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது.
எனவே இந்த வழக்கும் காலாவதி ஆனதாக அறிவிக்க வேண்டும். அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபாலன் இதை எதிர்த்து வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனபாலன், இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டார். வழக்கு வருகிற 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications