தேமுதிக 3வது ஆண்டு விழா
தேமுதிக 3வது ஆண்டு விழாபுதுக்கோட்டையில் விழாக்கோலம்
புதுக்கோட்டை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 3வது ஆண்டு விழாவையொட்டி புதுக்கோட்டையில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். புதுக்கோட்டை நகர் முழுவதும் தேமுதிக கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன. நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதுரையில் கடந்த 2005ம் ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்ட தேமுதிக இன்று 2 ஆண்டுகளை முடித்து 3வது ஆண்டில் காலடி வைத்துள்ளது.
இதையொட்டி புதுக்கோட்டையில், தேமுதிகவின் 3ம் ஆண்டு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற வடிவில் பிரமாண்ட மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்காக பாலன் நகரில் இந்த மேடை போடப்பட்டுள்ளது. பிரமாண்டமான பந்தலும் போடப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் மாநாட்டிற்கு வரும் பெண்கள் அமர தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட வந்த கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், விஜயகாந்த்தின் மச்சானுமான சுதீஷ் கூறுகையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
மாநாட்டில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நல உதவிகளை தலைவர் விஜயகாந்த் வழங்குகிறார். இதையடுத்து ஒவ்வொரு அணியைச் சேர்ந்தவர்களும் பேசுவார்கள். இறுதியாக விஜயகாந்த் சிறுப்புரையாற்றுவார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications