ரம்ஜான் நோன்பு கஞ்சி குடித்த சிறுமி மரணம்
சென்னை:
வேலூர் மாவட்டம் வாலாஜாபாத்தில், ரம்ஜான் மாத நோன்புக் கஞ்சியைக் குடித்த 13 வயது சிறுமி இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாலாஜாபாத்தில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று மாலை நோன்புக் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.
தஸ்லிமா என்பவர் தனது 13 வயது மகளுடன் வந்து கஞ்சியைப் பெற்றுச் சென்றார். பின்னர் வீட்டுக்குச் சென்று அவர்கள் கஞ்சியை சாப்பிட்டுள்ளனர்.
கஞ்சியை சாப்பிட்டதும் இருவருக்கும் தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு ஆரம்ப கட்ட சிகிச்சைக்குப் பின்னர் தஸ்லிமாவின் மகள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
அசுத்தமான தண்ணீரில் கஞ்சி தயாரிக்கப்பட்டதே சிறுமியின் மரணத்திற்குக் காரணம் என போலீஸார் தெரிவித்தனர்.
தஸ்லிமாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications