அத்வானியை சந்திக்க ஜெ. மறுப்பு?
சென்னை:
மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானியை சந்திப்பதைத் தவிர்க்கவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட்டுக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும், அத்வானியை சந்திக்க ஜெயலலிதா அவசரப்படவில்லை என்றும் அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
நெல்லையில் நடைபெறும் பாஜக செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அத்வானி இன்று தமிழகம் வருகிறார். சென்னை வரும் அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஜெயலலிதா திடீரென சென்னையிலிருந்து கிளம்பி கோடநாடு எஸ்டேட்டுக்குப் போய் விட்டார். இதனால் அத்வானி, ஜெயலலிதா சந்திப்பு கேள்விக்குறியாகி விட்டது.
அத்வானியை சந்திக்க ஜெயலலிதா அவசரப்படவில்லை என்பதால்தான், சந்திப்பைத் தவிர்க்க அவர் கோடநாடு கிளம்பிப் போய் விட்டதாக கூறப்படுகிறது. அத்வானியை சந்திக்கும் திட்டம் எதுவும் ஜெயலலிதாவிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.
தனது பயணத்தை ரத்து செய்து விட்டு அத்வானியை சந்திக்க 'அம்மா' வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று அதிமுக தரப்பிலும் கூறப்படுகிறது.
அத்வானி வருகை-நெல்லையில் பலத்த பாதுகாப்பு:
இதன் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அத்வானி - ஜெயலலிதா சந்திப்புக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டன.
இந்நிலையில் அத்வானி வருகையொட்டி நெல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவதால் பொதுக் குழு கூட்டம் நடக்கும் மஹராசி மஹால், மாநாடு நடைபெறும் வஉசி மைதானம் மற்றும் சங்கர் நகர் விருந்தினர் மாளிகை ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications