தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
கோவில்பட்டியில் இருந்து குருமலை செல்லும் மெயின்ரோட்டில் கெச்சிலாபுரம் விலக்கு உள்ளது.
இங்குள்ள ஓடை பாலத்தின் அருகில் நேற்று காலை 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஓருவர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மந்திதோப்பு கிராம நிர்வாக அதிகாரி வேல்சாமி, தலையாரி ஜெயபால் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
கொல்லப்பட்டவர் யார், எந்த ஊர் என்பது தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications