குற்றால அருவிகளில் தொடர் வெள்ளம்-குளிக்க தடை
Subscribe to Oneindia Tamil
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மிக பலத்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீர் கொட்டுகிறது.
மழையால் இம்மாவட்டத்திலுள்ள 6க்கும் மேற்ப்பட்ட நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
கட்டுக்கடங்காமல் காட்டாற்று வெள்ளமாக நீர் கொட்டுவதால் அருவிகளில் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications