நான்குநேரியில் 7 புதிய தொழில் மண்டலங்கள்!
சென்னை:
நான்குநேரியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த பல்நோக்கு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குப் பதில் புதிதாக 7 வெவ்வேரு தொழில் மண்டலங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் கனவுத் திட்டம்தான் நான்குநேரி பல்நோக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம். ஆனால் இந்தத் திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவே இல்லை.
இந்த நிலையில் நான்குநேரியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த பல்நோக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குப் பதில், வெவ்வேறு தொழில் சார்ந்த 7 தொழில் மண்டலங்களைக உருவாக்க தற்போது தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் நான்குநேரியிலேயே அமையும்.
616 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த தொழில் மண்டலங்கள் உருவாக்கப்படும். விரைவில் இவை நடைமுறைக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.
இதில் 110 ஹெக்டேர் பரப்பளவில் ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையும், 121 ஹெக்டேர் பரப்பளவில் பொறியியல் துறை நிறுவனம் ஒன்றும் வருகிறது.
107 ஹெக்டேரில் மின்சாரம் மற்றும் மின்னணு உதிரி பாக பிரிவு உருவாகிறது. 185 ஹெக்டேர் பரப்பளவில் மருந்துத் தயாரிப்புப் பிரிவு உருவாக்கப்படுகிறது.
பத்து ஹெக்டேரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், 13 ஹெக்டேரில் பயோடெக் தொழிற்சாலையும் வரவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சியிந்போது, தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுதான் நான்குநேரில் பல்நோக்கு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்கலாம் என பரிந்துரைத்தது. இதையடுத்து நான்குநேரியில் நடந்த விழாவில் இதற்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் நான்குநேரித் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நான்குநேரி சிறப்புப் ெபாருளாதார மண்டலத்தை மீண்டும் கையில் எடுத்தது. இருப்பினும் தற்போது பல்நோக்கு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குப் பதில் 7 வகையான தொழில் மண்டலங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications