ஏ-1 நகரமானது பெங்களூர்-வீட்டு வாடகைப்படி உயரும்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூர் நகரத்திற்கு ஏ-1 நகர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய நிதித்துறையின் செலவுத் துறை கடந்த 21ம் தேதி பிறப்பித்துள்ளது.
ஏ-1 அந்தஸ்துப்படி, பெங்களூர் நகரில் வேலை பார்க்கும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப் படி, அவர்களது அடிப்படைச் சம்பளத்திலிருந்து 30 சதவீதம் அதிகரிக்கும் அல்லது தற்போது வாங்குவதை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
ஏ-1 அந்தஸ்து பெறும் 6வது நகரம் பெங்களூராகும். இதற்கு முன்பு டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் இந்த அந்தஸ்துடன் உள்ளன.












Click it and Unblock the Notifications