திருச்சியில் வைத்து லியாகத்திடம் விசாரணை
திருச்சி:
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் மாப்பிளை வேடம் போட்டு பணம் மற்றும் மானத்தை மோசடி செய்த லியாகத் அலிகானை திருச்சிக்கு அழைத்துச் சென்று சென்னை தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![]() |
| Click here for more images |
தற்போது அவரை திருச்சிக்கு தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பாலக்கரை மற்றும் ஸ்ரீரங்கத்தில் அவர் இன்டர்நெட் மையம் நடத்தி வந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க முயன்றனர்.
ஆனால், அவர் போலீஸ் ஜீப்பிலிருந்து இறங்க மறுத்து அடம் பிடித்தார். இதையடுத்து மீண்டும் அவரை காவல் நிலையத்திற்கே கொண்டு சென்று அங்கு வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பேராசையால் தன்னிடம் ஏமாந்தவர்களுக்கு நான் பொறுப்பாக முடியாது. அவர்கள் ஏமாந்ததற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று படு தெனாவட்டாக போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம் லியாகத் அலி.
'புன்னகையுடன்' நல்லுறவு!!:
இதுவிர பிரபலமான 'புன்னகை இளவரசி' நடிகையுடனும் தனக்கு நல்லுறவு இருந்ததாகவும், பெரும் பணம் செலவழித்து அவருடன் உற்சாகமாக உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறியுள்ளார் லியாகத் அலி.
சென்னை தனிப்படை போலீஸாரிடம் லியாகத் அலிகான் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூல விவரம் ...
இன்டர்நெட் மூலமாக பெண்களை ஏமாற்றியது உண்மைதான். ஆனால் யாரை ஏமாற்றினேன் என்றெல்லாம் எனக்கு தெரியாது. எல்லாம் மறந்து போச்சு.
மேலும், நானாகப் போய் யாரையும் ஏமாற்றவில்லை. எனது நடவடிக்கைகள் தெரிந்தும் கூட என்னை விட்டுப் பிரிய அந்தப் பெண்களுக்கு மனம் இல்லை. அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.
நான் கல்யாணம் செய்தது 2 பெண்களைத் தான். அதுவும் முதல் மனைவியின் சம்மதத்தின் பேரில் தான் 2வது திருமணம் செய்து கொண்டேன். எந்த ஊரிலாவது ஒரு மனிதன் 100 பெண்களை திருமணம் செய்துகொண்டு வாழமுடியுமா.
நான் வைத்திருந்த கம்ப்யூட்டர், லேப் டாப், செல்போனில் செக்ஸ் படம் நிறைய வைத்திருந்தேன். அது தப்பா. இன்றைக்கு இருக்கும் சூழலில் பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்கள் செல்போனை இந்த போலீஸ்காரர்கள் வாங்கி பார்க்கட்டும். அதில் என்ன இருக்குன்னு தெரியும்.
எந்த போலீஸ் உயர் அதிகாரியின் கம்ப்யூட்டரில் ஆபாச படங்கள் இல்லை. சொல்லுங்கள் பார்க்கலாம். போலீஸ் அதிகாரியின் உறவுக்கார பெண்ணிடம் பணம் வாங்கியதற்காக என் மீது இத்தனை பொய் வழக்கா?
எந்த பெண்ணிடமும் அவ்வளவு பணம் வேண்டும், இவ்வளவு பணம் வேண்டும் என கேட்டு வாங்கியதில்லை. எனது போக்குவரத்து செலவுக்காக அவர்களாக விருப்பப்பட்டு கொடுத்த பணம் தான் அதிகம்.
அதோடில்லாமல் என்னை மணக்க விரும்பும் பெண்களை மும்பை, ஊட்டி, கொடைக்கானல் அழைத்து செல்வதற்காக மட்டுமே விமான கட்டணம், தங்கும் விடுதி செலவு என ரூ. 15 லட்சம் செலவாகிவிட்டது. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பது நோக்கமல்ல.
எப்படி ஒரு வாலிபருக்கு திருமணம் என்றால் பல இடங்களில் மணமகள் தேடுவார்களோ அதே போல் தான் நானும் தேடினேன்.
எனது முதல் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாததால் வேறு பெண் தேடினேன். இதில் என்ன தவறு இருக்கிறது.
நான் யாரையும், கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி திருமணம் செய்யவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த விதவை பெண்களையும், கணவனால் கைவிடப்பட்டவர்களையும், சமுதாயம் ஒதுக்கி தள்ளிய ஊனமுற்ற பெண்களுக்கும் அவர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழ்ந்தேன்.
என்னிடம் உள்ள பணத்தை கொண்டு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள லயன்சிட்டி' லாட்ஜில் அறை எடுத்து தங்கினேன். அங்கு என்னை தேடி வரும் சில பெண்களுடன் உல்லாசம் அனுபவித்தேன். அது எனது தனிப்பட்ட விஷயம்.
புரோக்கர்கள் மூலம் சில நடிகைகளை ஏற்பாடு செய்து அவர்களுடன் ஜாலியாக இருந்துள்ளேன்.
புன்னகைக்கு' பெயர் பெற்ற நடிகை ஒருவருக்கு ரூ. 6 லட்சம் கொடுத்து விமானத்தில் மும்பை அழைத்து சென்று உல்லாசமாக பொழுதை கழித்தேன்.
கூட்டிக் கேட்டு அடம் பிடித்த நடிகைகள்:
யாரையும் ஏமாற்ற வில்லை. ரூ. 40 ஆயிரம் ரேட் பேசி வந்த ஒருசில நடிகைகள் ரூ. 50 ஆயிரம் கேட்டு அடம்பிடித்து என்னை ஏமாற்றி உள்ளனர். அவர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இண்டர்நெட் சென்டரில் ஆபாச படம் எடுத்ததாகவும் கஞ்சாவைத் திருடியதாகவும் என் மீது திருச்சி போலீசார் போட்ட பொய் வழக்கு செல வுக்கு மட்டும் ரூ. 10 லட்சத்திற்கு மேல் செலவாகிவிட்டது.
எந்த பெண்ணையும் அனுமதி இல்லாமல் தொட்டதில்லை. அவர்களை, முறையான அனுமதியோடு, மனைவியாகத்தான் தொட்டுள்ளேன். ஊரில் யாரும் செய்யாத தவறை நான் செய்யவில்லை.
அவர்களுக்கு பேராசை. எனக்கு பணத்தகராறு. இதுக்கும், அதுக்கும் சரியாகி விட்டது. யாரையும் திட்டமிட்டு ஏமாற்றவில்லை. திருமண ஏற்பாட்டில் சில தவறுகள் நடந்து விட்டது, அவ்வளவுதான் என்று படு கேஷுவலாக திமிருடன் கூறியுள்ளார் லியாகத் அலி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications