'கலைஞருக்குப்' பேட்டி; குடியாத்தம் நகராட்சி தலைவர் மீது அதிமுக ஆத்திரம்!
குடியாத்தம்:
திமுகவின் கலைஞர் டிவிக்கு, குடியாத்தம் அதிமுக நகராட்சித் தலைவர் பேட்டி கொடுத்ததால், வேலூர் மாவட்ட அதிமுகவினர் கடுப்பாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் அதிமுக சார்பில் கவுன்சிலராக இருப்பவர் சிவப்பிரகாசம். இவர் முதலில் சுயேச்சையாகத்தான் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு அதிமுக ஆதரவு கொடுத்து, அதிமுக வேட்பாளராக நிறுத்தி ஜெயிக்க வைத்து, நகராட்சித் தலைவர் பதவியும் கொடுத்தது.
இந்த நிலையில், கடந்த 19 ம்தேதி கலைஞர் டிவியில் சிவப்பிரகாசம் பேட்டி கொடுத்தார். இதைப் பார்த்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
குடியாத்தம் நகராட்சித் தலைவர் பதவியை சிவபிரகாசம் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுகவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்த பதவி அதிமுகவால் கிடைத்த பதவி. கட்சி கட்டுப்பாட்டை மீறிய சிவபிரசாசத்தை உடனே கட்சியை விட்டு நீக்க வேண்டும் என அதிமுக தலைமைக்கும் புகார் அனுப்பியுள்ளனர்.
ஆனால் சிவப்பிரகாசமோ, எனது தொழில் தொடர்பாகத்தான் பேட்டி கொடுத்தேன். அதில் என்ன தவறு இருக்கிறது. எனக்கு பிஸினஸ் தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான் என்று கூறி வருகிறாராம்.
விரைவில் திமுகவில் இணைய சிவப்பிரகாசம் ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications