திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியிலும் மர்மக் காய்ச்சல் - மாணவ, மாணவியர் பீதி
திருநெல்வேலி:
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியைத் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும் மர்மக் காய்ச்சல் பரவியுள்ளது. நான்கு நர்சிங் மாணவிகள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பீதி கிளம்பியுள்ளது.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில் மர்மக் காய்ச்சலால் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டனர். கரீமா பிரதான் என்ற உ.பி. மாணவி இந்தக் காய்ச்சலால் உயிரிழந்தார். கல்லூரிக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியிலும் மர்மக் காய்ச்சல் பரவியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கனக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக தினமும் பாளை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனை வாளகத்தில் உள்ள நர்சிங் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் சிலர் கடந்த ஒருவாரமாக திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாசரேத் அருகே உள்ள பால்குளத்தை சேர்ந்த 2ம் ஆண்டு மாணவி சித்ரா, நெல்லை வாண்ணார்பேட்டையை சேர்ந்த முதலாமாண்டு மாணவி ராணி ஆகியோர் கடந்த 28ம் தேதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பீதியடைந்த பல மாணவிகள் விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். விடுதி உள்ள பகுதியில் கொசுத் தொல்லை அதிகம் உள்ளதும், சுகாதார சீர்கேடு மலிந்து கிடப்பதுமே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications