சென்னையில் ரூ. 3.50 லட்சம் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் கடத்தப்படவிருந்த ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், இளையாங்குடியை சேர்ந்தவர் அன்சாரி (19). இவர் நேற்றிரவு மலேசியா செல்வதற்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். அப்ேபாது அன்சாரி கொண்டு வந்த பையை ஸ்கேன் செய்து பார்த்ததில், பையில் ஏதோ ஊர்ந்து செல்வது போலத் தெரிந்தது.
உடனே அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று அவரின் பையை சோதனை செய்தார்கள். பையை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
பையில் உயிருடன் 333 நட்சத்திர ஆமைகள் இருந்தது. இதனுடைய மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.3.5 லட்சம் ஆகும். போலீசார் அன்சாரியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நட்சத்திர ஆமைகள் மருத்துவத்திற்கு பயன்படுவதால், மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications