பாப்பையா மீது தங்கர் பச்சான் பாய்ச்சல்
மதுரை:
அது பெரியதா, இது பெரியதா என்று பட்டிமன்றம் நடத்தி சாலமன் பாப்பையா போன்றவர்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். இதனால் மக்களுக்கு என்ன பயன் என்று இயக்குநர் தங்கர் பச்சான் கேட்டுள்ளார்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் ரத்ததான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் இயக்குனர் தங்கர்பச்சான் கலந்து கொண்டு பேசுகையில், ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு படிக்கும் காலத்திலேயே பாடத்திட்டத்தில் கொண்டு வந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எல்லோரும் ரத்தம் கொடுக்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்க வேண்டும். கார் லைசென்ஸ் கேட்டு வருபவர்களிடம் ரத்ததானம் செய்தால்தான் லைசென்ஸ் தருவோம் என்று சொன்னால் கொடுத்து விடுவார்கள். பணக்காரர்களிடம் தான் அதிக ரத்தம் உள்ளது.
சினிமாவிலும் சரி, டிவியிலும் சரி ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சமும் கிடையாது. முக்கிய தினங்களில் காலை முதல் மாலை வரை சிரிப்பு நடிகர்கள் வந்து சிரிக்க வைத்துவிட்டு போய் விடுகின்றனர்.
அதே போன்று பட்டிமன்றம் நடத்தும் சாலமன் பாப்பையா, இது பெரிதா? அது பெரிதா? என ஆராய்ச்சி செய்து மக்களின் நேரத்தை வீணடிக்கிறார். பட்டி மன்றத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை
வரும் காலங்களில் எனது படங்களில் ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை இடம் பெறச் செய்வேன் என்றார் பச்சான்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications