சவூதியில் தமுமுகவின் இப்தார் விருந்து

Subscribe to Oneindia Tamil


ரியாத்:

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம், சவூதி அரேபிய மத்திய மண்டல தாஃவா கமிட்டி சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது.

ரியாத் ஹாராவில் உள்ள டொலிடோ ரெஸ்டாரென்ட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் மண்டல தாஃவா பணிக்குழு செயலாளர் மவ்லவி ஹசன் பிர்தௌஸி கிராத் ஓதினார். ஆங்கிலத்தில் குர்ஆன் மொழிபெயர்ப்பை மண்டல துணைச்செயலாளர் நூர் முஹம்மது வாசித்தார்.

ரியாத்தில் உள்ள அனைத்து மாநில முக்கியக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் எம்.ஓ.ஹெச். ஃபரூக் மரைக்காயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முழுமையாக ஆங்கிலத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மாலை 4.45க்கு துவங்கியது. மண்டல தலைவர் ஆரிஃப் மரைக்காயர் தலைமை தாங்கி பேசும்போது கேரளா, கர்நாடக, ஆந்திராவைத் தொடர்ந்து தற்போது தமுமுகவின் 12 ஆண்டுகால போராட்டத்திற்கு பின் தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துள்ளது.

அதுபோல் வட இந்தியாவிலும் இடஒதுக்கீடு பெற அந்தந்த மாநில முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் போராட வேண்டும் அதற்கு தமுமுக அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது என்றார்.

மேலும் த.மு.மு.க.வின் அடுத்த இலக்கு அகில இந்திய அளவில் இடஒதுக்கீடு பெறுவது, அதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர கேட்டுக் கொண்டார்.

முன்னிலை வகித்து பேசிய ரியாத் ஹெச்.சி.ஆபி.சி. அமைப்பாளர் குரைக்ஷி, உரிமைகள் மறுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்காக த.மு.மு.க. செய்யும் சேவைகள் பாராட்டுதலுக்கு உரியது. எனவே அவற்றில் அனைவரும் கலந்துக் கொண்டு நன்மைகளை அடைவோம் என்று அழைப்பு விடுத்தார்.

குர்ஆன் கூறும் அறிவியல் என்ற தலைப்பில் ஹைதராபாத்தை சோந்த டாக்டர் க்ஷாஜித் அப்பாஸி குர்ஆன் வசனங்களை முன்னிலைப்படுத்தி உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்.ஓ.ஹெச். ஃபரூக் மரைக்காயர் பேசுகையில், தமிழகத்தில் சிறுபான்மை சமுதாயங்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீட்டை போராடி பெற்றுத் தந்த த.மு.மு.க.விற்கு வாழ்த்து தொவித்தார். மேலும் சவுதி அரேபியாவில் துன்பத்திற்கு ஆளாகும் நபர்களுக்கு உதவும் கரங்கள் நீளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உருது மொழியிலான விதையின் கதை (இன்குலாப் இ தஹ்ரிக்) என்ற த.மு.மு.க. கடந்து வந்த பாதை மற்றும் டெல்லி பேரணியின் முக்கிய நிகழ்வுகள் அடங்கிய ஒரு சி.டி. அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

இறுதியில் ஆர்.எப்.சி.யின் தலைவா கேரளாவைச் சோந்த அப்துல் மஜீத் குஞ்சு நன்றி கூறி துவா ஓதி முடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+