குஜராத் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு- டிசம்பரில் 2 கட்டங்களாக நடக்கிறது
டெல்லி:
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபைகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி நேற்று அறிவித்தார்.
குஜராத்தில் தற்போது பாஜக ஆட்சியும், இமாச்சலப் பிரதேசத்தில் வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியும் நடந்து வருகின்றன.
குஜராத் சட்டசபையின் ஆயுட்காலம் டிசம்பர் 26ம் தேதியும், இமாச்சல பிரதேச சட்டசபை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு மார்ச் 9ம் தேதியும் முடிகிறது.
இதையடுத்து இரு மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி நேற்று தேதிகளை அறிவித்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்தார்.
குஜராத் தேர்தல்:
மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 11 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களில் தேரத்ல் நடைபெறும்.
முதல் கட்டத் தேர்தல் 87 தொகுதிகளுக்கும், 2வது கட்டத் தேர்தல் 95 தொகுதிகளுக்கும் நடைபெறும். முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 15ம் தேதி தொடங்குகிறது. 2வது கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனு நவம்பர் 21ம் தேதி தொடங்கும். பதிவான வாக்குகள் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும்.
இமாச்சலப் பிரதேசம்:
இங்குள்ள 68 தொகுதிகளில், பனிப்பொழிவு விரைவில் தொடங்கியுள்ள 3 தொகுதிகளுக்கு மட்டும் முதல் கட்டமாக நவம்பர் 14ம் தேதி நடைபெறும். இதற்கான வாக்குப் பதிவு வருகிற 20ம் தேதி தொடங்குகிறது.
மீதமுள்ள 65 தொகுதிகளுக்கும் டிசம்பர் 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். இத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 28ம் தேதி எண்ணப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications