புத்தக கொள்முதல் முறைகேடு: “தவறு செய்த ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா?” - ஐகோர்ட் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: "புத்தகக் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் தவறு செய்த ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லையா?" என அரசு பொது நூலகத்துறை இயக்குநரிடம் உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும், 16 ஆம் தேதிக்குள் வழக்குப்பதிவு செய்துவிடுவோம் என்றும் அரசுத் தரப்பு பதில் அளித்த நிலையில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Periyar arivulagam

கடந்த திமுக ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் சுமார் 7 ஏக்கரில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 7 மாடிகளுடன் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்த நிலையில், பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்து இருப்பதாக, அந்த நூலகத்துக்கான புத்தகங்களை வாங்குவதற்கான பரிந்துரை குழுவில் இடம்பெற்று இருந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். பெருமாள் முருகனின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலிலும், இலக்கிய உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில் நெல்லை கிருஷ்ணாபுரத்​தைச் சேர்ந்த ராமசுப்பு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் ஒரு மனுவை தாக்​கல் செய்தார். அந்த மனுவில், நூல​கங்​களுக்கு புத்​தகம் கொள்​முதல் தொடர்​பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு 2024-ல் பல கட்​டுப்பாடுகளை விதித்து உத்​தர​விட்​டது. அந்த உத்​தரவு அமல்​படுத்​தப்​பட​வில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்​நிலை​யில் தமிழகத்​தில் நூல​கங்​களுக்கு புத்​தகம் கொள்​முதல் செய்​ததில் மிகப்​பெரியளவில் முறைகேடு நடந்​திருப்​பது வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. இந்த முறைகேடு பெரியார் அறி​வுல​கத்​துக்​கான 2026-ம் ஆண்​டின் கொள்​முதல் உத்​தரவு​களு​டன் மட்​டும் இல்​லாமல் மதுரையில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு நூல​கம் வரை நீள்​கிறது. பல ஆண்​டுகளாக முறைகேடு நடை​பெற்று வரு​கிறது.

தவறு இழைத்த அதி​காரி​கள் மற்​றும் மோசடி பதிப்​பாளர்​கள் மீது குற்​றவியல் நட​வடிக்கை எடுக்க சிபிஐ அல்​லது சிபி​சிஐடி விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும் என அந்த மனுவில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. பொது நூல​கத்​துறை இயக்​குநர் ஷஜீவனா காணொளி​யில் ஆஜரானார். விசாரணையின்போது நீதிபதிகள், "அகல் விளக்கு பதிப்​பகம் மற்​றும் அதன் உரிமையாளரின் வங்கி கணக்​கு​களை முடக்​காமல் வைத்​திருப்​பது ஏன்?" என கேள்வி எழுப்​பினர்.

இந்த முறைகேடு தொடர்​பாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் உடனடி​யாக வழக்​குப் பதிவு செய்ய வேண்​டும். கடந்த 2 ஆண்​டுகளாக நடந்த புத்​தகக் கொள்​முதல் தொடர்​பான அனைத்து விவரங்​களை​யும், கொள்​முதல் செய்த அதி​காரி​களின் பட்​டியலை​யும் அரசு தாக்​கல் செய்ய வேண்​டும். அகல் விளக்கு பதிப்​பகம் மற்​றும் அதன் உரிமையாளரின் வங்​கிக் கணக்​கு​களை உடனே முடக்க வேண்​டும் என உத்​தர​விட்​டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பொது நூல​கத்​துறை இயக்​குநர் ஷஜீவனா காணொளிக் காட்சு வாயிலாக ஆஜரானார். அப்போது நீதிபதிகள், அகல்விளக்கு பதிப்பகத்திடம் புத்தகங்களை கொள்முதல் செய்ய பரிந்துரை செய்தது யார்? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, 112 உறுப்பினர்களை கொண்ட குழு அகல் விளக்கு பதிப்பக நூல்களை கொள்முதல் செய்ய பரிந்துரை செய்ததாக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அகல் விளக்கு பதிப்பகத்திடமிருந்து 1,700 புத்தகங்களை வாங்க திட்டமிட்டு நூலகத்துறை இயக்குநா் ரூ.17 லட்சம் கொடுத்துள்ளாா் பிரதமரின் மனதின் குரல் தொடர்பான புத்தகத்தை குழு பரிந்துரைத்தது, ஆனால் கொள்முதல் செய்யப்படவில்லை. தவறு செய்த ஒரு நபரை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா?" என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பொது நூலகத்துறை இயக்குநரிடம் கேள்வி எழுப்பினர்.

4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும், 16 ஆம் தேதிக்குள் வழக்குப்பதிவு செய்துவிடுவோம் என்றும் அரசுத் தரப்பு பதில் அளித்த நிலையில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+