திருட்டு பழி: போலீஸ் சித்ரவதை-தம்பதி தற்கொலை
கும்மிடிப்பூண்டி:
தாலிச் செயின் திருடியதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட கூலித் தொழிலாளியும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா (44) . இவரது மனைவி ரோஜா (38). இவர்களுக்கு பாரதி (20), சபீதா என்ற மகள்களும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த மேரி சந்திரா என்பவரின் தாலி செயின் கடந்த மாதம் திருட்டு போனது. இது குறித்து மாதம்பாக்கம் போலீசில் புகார் தந்த மேரி, ராஜா மீது சந்தேகம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து போலீசார் ராஜாவையும், ரோஜாவையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். ஆனால் ராஜாவும், ரோஜாவும் நகையை திருடவில்லை என்று மறுத்தனர்.
ஆனாலும் விடாத போலீசார் அவர்களை சித்ரவதை செய்துள்ளனர். வாரம் தவறாமல் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, ஒரு தற்கொலைக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
அந்தக் கடிதத்தில் போலீஸ் அதிகாரி அவர்களுக்கு, நாங்கள் நகையை திருடவில்லை என்று கெஞ்சியும், நீங்கள் கேட்காமல் எங்கள் மீது திருட்டு பழி சுமத்தி சித்ரவதை செய்தீர்கள் இதனால் நாங்கள் அவமானம் அடைந்தோம்.
நாங்கள் எடுத்து சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை. எனவே எங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறோம். எங்களின் 5 மாத ஆண் குழந்தையை தம்பி ரவியிடம் கொடுக்கவும். அவர்கள் வாங்க மறுத்தால் அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடவும். போலீசாரின் சித்ரவதை தாங்க முடியாமல் தான் நாங்கள் தற்கொலை செய்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications