மதுரை: சாலை விபத்தில் 3 பேர் பலி
மதுரை:
மதுரை அருகே இன்று காலை உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஒளவையார் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் அழகப்பன். இவரது உறவினர் ஒருவர் தஞ்சாவூர் அருகேயுள்ள திருக்காட்டுப்பள்ளியில் இறந்துவிட்டார். உறவினர்களிடம் துக்கம் விசாரிப்பதற்காக டாக்டர் அழகப்பன் உட்பட 12 பேர் வேனில் சென்றனர்.
இன்று காலை 8 மணியளவில் மேலூரை தாண்டி பள்ளப்பட்டியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, எதிரே அசுர வேகத்தில் வந்த லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் டாக்டர் அழகப்பனின் தாயார் மோகனா (60), வைராச்சி(60) மற்றும் மீனாட்சி (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டாக்டர் அழகப்பன் உட்பட மற்ற 9 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் அவசர சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த டாக்டர் அழகப்பன், ராமநாதன், சாந்தி, மீனாட்சி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications