லாரி மோதி இருவர் பலி-குழந்தை படுகாயம்
ஆலங்குளம்:
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள முக்கூடல் அருகே இன்று காலை சைக்கிள் மீது மணல் லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். குழந்தை படுகாயம் அடைந்தது.
முக்கூடல் அருகே உள்ள புதுப்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். வாய் பேச முடியாதவர். மருதம்புத்தூரை சேர்ந்த வேலாயுதம் மகன் பண்டாரம். இவர்கள் இருவரது தோட்டமும் கண்டப்பட்டி என்ற இடத்தில் உள்ளது.
இன்று காலை தங்கராஜ் மற்றும் பண்டாரம் ஆகியோர் தங்களது தோட்டத்திற்கு சென்று வயலில் நாற்று நட்டு விட்டு தனித்தனியாக சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பண்டாரம் தனது 3 வயது மகன் ஆறுமுகத்தை சைக்கிளில் பின்னால் வைத்து ஓட்டி வந்தார். அப்போது அந்த வழியாக வந்த மணல் லாரி இவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் உடல் நசுங்கிய தங்கராஜ், பண்டாரம் இருவரும் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தனர். படுகாயமடைந்த குழந்தை ஆறுமுகத்தை பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சம்பவம் நடந்தவுடன் லாரி டிரைவர் லாரியை அங்கிருந்து சற்று தொலைவில் நிறுத்தி விட்டு ஓடிவிட்டார்.
லாரியின் உரிமையாளர், டிரைவர் குறித்து முக்கூடல் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான தங்கராஜீக்கு ஆறுமுகவடிவு என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இதே போல் பண்டாரத்திற்கு அவ்வையார் என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இருவரது உடலையும் பார்த்து அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications